கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி. இவர் வேப்பூர் காவல் நிலையைத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் உள்ளார். வேப்பூர் அருகேயுள்ள அரியநாச்சி என்ற ஊரில் கோயில் பிரச்சினையில் இரு தரப்பினருக்குள் கோஷ்டி பிரச்சினை உள்ளது. இதற்காக வேப்பூர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் கொடுத்தும் போலீஸ் உரிய நடவடிக்கை எடுத்து பிரச்சினையை தீர்க்காததால் 13- ஆம் தேதி காலை 10 மணியளவில்ஒரு தரப்பை சேர்ந்த 100க்கும் மேற்ப்பட் ஆண்கள் பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசை கண்டித்து தீடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த தகவல் கேள்விப்பட்ட தினசரி பத்திரிகை செய்தியாளர்கள் இருவர் ஆர்ப்பாட்டத்தை படம் எடுத்தனர். இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் எஸ்ஐ பிரபாகரன் மற்றும் 20க்கும் மேற்ப்பட்ட போலீசார் ஆகியோர் கூட்டத்தை விரட்டியடித்துள்ளனர். அதை படம் எடுத்த அந்த இரு பத்திரிகையாளர்களிடம் ஓடிய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி உங்களை யார் படம் எடுக்க சொன்னது என்று கடுமையான வார்த்தைகளால் திட்டி கொண்டே அவர்கள் கையில் இருந்த கேமரா செல்போன்களை பிடிங்கியுள்ளார்.
அதை ஒரு நிருபர் தடுத்துள்ளார். இதனால் வீராவேசமான இன்ஸ்பெக்டர் இவன்களை அரஸ்ட் செய்து லாக்கப்பில் போடு என்று கடும் கோபமாக உத்தரவிட, பாய்ந்து சென்ற காவலர்கள் நிருபர்களை குண்டு கட்டாக தூக்கி கொண்டு போய் லாக்கப்பில் போட்டனர். விஷயம் தீயாய் பரவியதும் விழுப்புரம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பத்திரிகை ஊடக நண்பர்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். விஷயத்தை டிஎஸ்பி. தீபா சத்தியன், எஸ்பி அபிநவ் ஆகியோரிடம் கொண்டு சென்றனர் பத்திரிகை ஊடக அமைப்பினர். இதையடுத்து இன்ஸ்பெக்டரிடம் அதிகாரிகள் பேசியுள்ளனர். அவர்களோடு மோதல் போக்கு வேண்டாம் என்று சொல்லியுள்ளனர். ஐஜியே சொன்னாலும் ஏற்க மாட்டேன். அவர்கள் இருவரையும் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்புவேன் என்று இருந்தார்.
20க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் இருக்கும்போது பெண் இன்ஸ்பெக்டர் பத்திரிகையாளர்கள் கையில் உள்ள செல்போனை ஆத்திரத்தோடு ஓடி போய் ஏன் பிடுங்க வேண்டும்? பொதுவாக போராட்டத்தின் போது பெண்களை கைது செய்ய பெண் காவலர்கள் தான் ஈடுபட வேண்டும். ஆண் காவலர்கள் ஈடுபட்டால் விபரீதமான பிரச்சினை வரும். இப்படிப்பட்ட அடிப்படை விஷயத்தை கூட தெரிந்து கொள்ளாமல் பெண் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி இருக்கிறார் என்று பத்திரிகையாளர்கள் விவாதம் செய்த பிறகும், இன்ஸ்பெக்டர் விடிவாதம் செய்ய பொருமை இழந்த பத்திரிகை ஊடகத்தினர் காவல் நிலையம் முன்பு திரண்டனர். இவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் சேர்ந்து ஆதரவு தர திடீர் ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக முடிவெடுத்தனர். இதை அறிந்த அதிகாரிகள் பிரச்சினை பெரிதாகக் கூடாது என்று மாவட்ட எஸ்பி. அபினவ் இருவர் மீதும் சிஎஸ்ஆர் பதிவு செய்ய சொல்லி பிறகு பத்திரிகையாளர்களை மாலை 4 மணியளவில் விடுதலை செய்தனர். இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரிக்கு எதிராக பத்திரிகை ஊடகத்தினர் மற்றும் அனைத்து கட்சி பொது நல அமைப்பினர் தீவிர போராட்டத்தில் இறங்க உள்ளனர்.