ஹைட்ரோ கார்பன், உள்ளிட்ட பேரழிப்புத் திட்டங்களுக்கு எதிராக தஞ்சாவூரில் வரும் 23-ம் தேதி முதல் மக்கள் பேரணி நடைபெறும் என அறிவித்திருக்கிறது பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம்.
இதுகுறித்து நிறுவனத் தலைவர் க.கா.இரா. லெனின் கூறுகையில், "தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்கும் திட்டங்களான ஹைட்ரோ கார்பன், பாதுகாக்கப்பட்ட பெட்ரோ ரசாயன மண்டலம், சாகர் மாலா திட்டம், அனல் மின் நிலையங்கள், கூடங்குளம் அணு உலைகள், நியூட்ரினோ, எட்டு வழிச்சாலை திட்டம், ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பாதகத் திட்டங்களை அரசு கைவிட வேண்டும்.
காவிரிப் பாசனப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். உயர் மின் அழுத்தக் கம்பிகளை புதைவடக்கம்பிகள் மூலம் சாலையோரமாகக் கொண்டு செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப். 23-ம் தேதி தஞ்சாவூரில் மக்கள் பேரணி நடத்தப்போகிறோம்" என்றார்.