Skip to main content

"ஆதார் அட்டையை" இணையதளம் மூலம் பதிவிறக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்ளலாம்.

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

மத்திய அரசு "ஆதார் அட்டைக்கென்று"  தனி ஆணையம் அமைத்துள்ளது. இதன் பெயர் "Unique Identification Authority of India" ஆகும். இந்த ஆணையம் இந்தியா முழுவதும் ஆதார் சேவை மையத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் அனைவரும் இந்த சேவையத்திற்கு சென்று "ஆதார் அட்டையை" பெற விண்ணப்பிக்கலாம் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள திருத்ததை மேற்கொள்ளலாம். திருத்தம் மேற்கொள்ள ஆதார் சேவை மையம் வசூலிக்கும் கட்டணம் ரூபாய் 30 ஆகும்.

 

adhar card



ஆதார் அட்டையை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி ?
 ஆதார் அட்டை இல்லாதோர் "ஆதார் சேவை மையம்" அணுக வேண்டும். அங்கு ஆதார் மையத்தில் இருக்கும் அலுவலர் ஒரு விண்ணப்பம் கொடுப்பார். அதை பூர்த்திச்செய்து அந்த அலுவலரிடம் கொடுத்த பின்பு "விண்ணப்பத்தில் பெயர் உள்ளவரை அனைவரையும் தனித்தனியே புகைப்படம் மற்றும் கண் கருவிழிகள் , கைரேகை பதிவு செய்த பிறகு தனித்தனியே "Acknowledgement Receipt" தருவார். ஆதார் அட்டையை பதிவு செய்வதற்கான குறுந்தகவல் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு வரும். சில நாட்கள் கழித்து இந்த "Acknowledgement No" யை இணையதளம் மூலம் பதிவிட்டு ஆதார் அட்டையின் நிலையை கண்டறியலாம்.

இதற்கான இணைதள முகவரி : 
https://resident.uidai.gov.in/check-aadhaar-status ஆகும். இந்த இணையதளத்திற்கு சென்று ஆதார் ஒப்புகை சீட்டில் உள்ள எண்கள் மற்றும் பெயரை பதிவிட்டு ஆதார் அட்டையின் தற்போதைய நிலையை அறியலாம்.

 

adhar card



ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய இணையதள முகவரி : https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html

"ஆதார் அட்டை" பிளாஸ்டிக்கில் "ஸ்மார்ட் கார்டு" வடிவில் வேண்டுமென்றால் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்கான இணையதள முகவரி : https://resident.uidai.gov.in/aadhaar-reprint
ஆகும். இதில் ரூபாய் 50 கட்டணத்தை இணைய தள வழியில் செலுத்தி AADHAAR CARD - ன் ENROLLMENT NO மற்றும் DATE AND TIME யை பதிவு செய்தால் பதிவுச்செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு "OTP" வரும். பின்பு "OTP" -யை பதிவிட்டு "Aadhaar Smart Card"-யை புக் செய்யலாம். பின் ஐந்து நாட்களுக்குள் "ஆதார் அட்டை" தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

"ஆதார் அட்டையில்" இணையதள வழியில் திருத்தம் மேற்கொள்ளலாம்!
1.பிறந்த தேதி.
2.தொலைபேசி எண்.
3. முகவரி 

உள்ளிட்ட திருத்தங்கள் மட்டுமே நம்மால் மேற்கொள்ளும் வகையில் ஆதார் ஆணையம் இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருத்ததை மேற்கொள்ள முதலில் ஆதார் அட்டையில் "தொலைபேசி எண்" இணைத்திருக்க வேண்டும். அப்போது தான் இணையதளத்தை பயன்படுத்தி திருத்தம் மேற்கொள்ள முடியும்.

தேவையான ஆவணங்கள் :
1.பிறந்த தேதி திருத்தம் மேற்கொள்ள (Voter ID, Driving License, Passport )
2.முகவரி மாற்றம் செய்ய விரும்பினால் (இருப்பிட சான்றிதழ் , கேஸ் ரசீதி , Passport) உள்ளிட்ட ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம்.

இந்த ஆவணங்கள் அனைத்தும் அசல் வேண்டும் . ஏனெனில் "Scan" செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதார் அட்டையின் திருத்தம் மேற்கொள்ள இதற்கான இணைய தள முகவரி : https://ssup.uidai.gov.in/web/guest/aadhaar-home ஆகும். இந்த இணையதளத்திற்கு சென்று திருத்தம் மேற்கொண்ட பின் "Acknowledgement Receipt" வரும். இதை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம். பின்பு ஆதார் அட்டை திருத்ததின் நிலையை அறிய இணைய தள முகவரி : https://ssup.uidai.gov.in/web/guest/check-status .

தங்கள் ஆதார் எண் எந்தெந்த வங்கிகள் மற்றும் மற்ற இடங்களில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய இணையதள முகவரி : https://resident.uidai.gov.in/bank-mapper . இந்த இணையதளத்திற்கு சென்று ஆதார் எண்ணை பதிவிட்டு விவரங்களை அறிந்துக் கொள்ளலாம்.ஆதார் சேவை மையம் தங்கள் பகுதியில் எங்கு உள்ளது ? என்பதை அறிந்துக்கொள்ள இணைய தள முகவரி : https://appointments.uidai.gov.in/easearch.aspx?aspxerrorpath=/centersearch.aspx சென்று தங்கள் வசிக்கும் மாவட்டம் , மாநிலம் , உள்ளிட்டவை பதிவு செய்தால் தங்கள் பகுதியில் ஆதார் சேவை மையம் எங்குள்ளது என்பதை எளிதாக அறியலாம்.

ஆதார் அட்டை தொடர்பான சந்தேகங்களுக்கு உதவி எண் (Toll Free) : 1947
ஈ-மெயில் : help@uidai.gov.in. மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் திட்டங்கள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கவும் ஆதார் எண் கட்டாயம் தேவை .


 

பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்