







Published on 01/07/2020 | Edited on 01/07/2020
இந்தியாவில் ஆண்டுதோறும் மருத்துவர்களின் சேவையைப் போற்றும் வகையில் மருத்துவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதல்வர் Dr.பிதான் சந்திர ராயின் பிறந்த தினமான ஜூலை 01 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக கரோனா உள்ளிட பேரிடர் காலங்களில் தன்னலமற்று சேவை செய்யும் மருத்துவர்களை நினைவுகூறும் வகையில் இன்றைய தினம் தேசிய அளவில் கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் மருத்துவர்களை வாழ்த்தும் அதே நேரத்தில் மருத்துவர்களும் மருத்துவச் சேவையைச் சிறப்பாகச் செய்ய உறுதியேற்கின்றனர். சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவர்கள் தினத்தைக் கொண்டாடும் விதமாக நோயாளிகளின் பாதுகாப்புக் குறித்து உறுதியெடுத்துக்கொண்டனர்.