அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்சிகளின் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதே போல திருச்சியில் அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஆனால் அ.தி.மு.க.வும் - அ.ம.மு.க.வும் போட்டி போட்டுக்கொண்டு பேரணி - கார் ஊர்வலம், டூவிலர் பேரணி என பிரமாண்டப்படுத்தி விட்டார்கள்.
திருச்சி மா.செ. குமார் தலைமையில் சுப்ரமணியபுரத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் டூவிலரில் புறப்பட்டு, தபால்நிலையம், நீதிமன்றம், எம்ஜி.ஆர்.சிலை, தென்னூர் வழியே சத்திரம் பேருந்து நிலையத் வந்து கொடி ஏந்தியபடி பெரும் கூட்டத்திற்கு நடுவே அண்ணாசிலைக்கு கட்சி பொறுப்பாளர்களுடன் மாலை அணிவித்து பத்திரிகையாளர்களிடம் பேசும் போது. திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தலில் எங்கள் பலத்தை நிறுபீத்து வெற்றியை உறுதி செய்வோம். இந்தியாவிலே மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க. என்று பேசினார்.
திருச்சியில் அ.ம.மு.க. சார்பில் தினகரன் தலைமையில் திருச்சியில் அண்ணாசிலைக்கு பேரணியாக சென்று மாலை அணிவித்து புதுக்கோட்டைக்கு பொதுகூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதானல் அ.ம.மு.க. மா.செ.கள் சீனிவாசன், மனோகரன், ராஜசேகரன், சாருபால தொண்டையன், ஆகியோர் தலைமையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தனர். தினகரன் அணி பேரணியில் 4 குதிரைகள், பேரணியை வழி நடத்த,மேளதாளங்க, ஜரிகை நடனம், கொடிகளை ஏந்தி பிரமாண்டமா வழக்கம் போல் திறந்தவெளி வந்து தொண்டர்களியே கையசைத்து வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு திருச்சி மாநகர் முழுவதும் பிரமாண்டமா பேனர்கள், வால்போஸ்டார்கள், தட்டிகள், கொடிமரங்கள் என அதகளபடித்தியிருந்தார்கள், பல இடங்களில் பேனர் வைப்பதற்கு போட்டா போட்டியே ஏற்பட்டது. சில இடங்களில் அனுமதி இன்றி பேனர் வைத்தாக தினகரன் பேனர்களை எடுத்தனர். ஒரே கட்சியாக இருந்த அதிமுக தற்போது இரண்டாக பிரிந்தாலும் தங்கள் பலத்தை காட்டுவதற்காக பயங்கரமாக கட்சிவேலைகளில் ஈடுபட்டு ஆட்கள் பிடிக்கும் வேலையில் இறங்கியிருக்கி இருப்பதால் திருச்சி அரசியல்… பரபரப்பை அடைந்துள்ளது.