Skip to main content

தேசிய மருத்துவ ஆணையம் போலி மருத்துவர்களை உருவாக்கும் - 24 மணி நேரம் வேலை நிறுத்தம்;ஆர்ப்பாட்டம்

Published on 31/07/2019 | Edited on 31/07/2019


 

    தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுவதை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. எதிர்ப்பை காட்ட மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு. ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.   அதே போல புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சங்க அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர்கள் கூறும் போது.. 


     பாராளுமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை நாடாளும் அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தில் எங்களுடைய சில கோரிக்கைகளை தேசிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனாலும் இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டுள்ளதை இந்திய மருத்துவ சங்கம் கண்டிக்கிறது. முக்கியமாக இந்த புதிய சட்டத்தில் உள்ள சில சரத்துக்களை முழுமையாக எதிர்க்கிறது.

 

i


    முதலாவதாக தனியார் மருத்துவ கல்லூரிகள் 50மூஇடங்களுக்கு தாங்களே கட்டண நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற பிரிவு ஏழை மாணவர்களுக்கு எதிரானது.  மேலும் இறுதி ஆண்டு தேர்வு  மதிப்பெண் அடிப்படையில் மேல் படிப்பு இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்த அறிவிப்பில் எத்தனை முறை மாணவர்கள் மீண்டும் முயற்சி செய்யலாம் என்பது தெளிவாக இல்லை.


    பிரிவு 32இல் “சமுதாய மருத்துவ உதவி அளிப்பவர்” என்ற பிரிவில் நவீன மருத்துவ பிரிவினை சேர்ந்த அனைவரும் (சிகிச்சை தர தகுதி அல்லாதோர்) மருத்துவ சிகிச்சை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு நாடு முழுவதும் போலி மருத்துவர்களையும் அரை வேக்காடு மருத்துவர்களையும் உருவாக்கும். இதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவி பொதுமக்கள் தான்.


    இப்படிப்பட்ட மசோதாவை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கம் தேசிய அளவில் 24 மணி நேரம் மாபெரும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தம் காலை 6 மணி தொடங்கி (31.07.2019) மறுநாள் (01.08.2019) காலை 6 மணி வரை நடைபெறும்.


    அத்தியாவசிய மருத்துவ சேவைகள் தவிர மற்ற அனைத்து சேவைகளும்  நிறுத்தப்படும். அவசர மருத்துவ சேவைகள் பிரசவம் மற்றும் உள் நோயாளிகள் பிரிவுகள் இயங்கும். இதனை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை வளாகத்தில் ஏராளமான தனியார் மருத்துவர்கள் தங்களது கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்தனர். இதில் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
            
        
 

சார்ந்த செய்திகள்