மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு கோரி திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், ஓ.பி.சி. பிரிவினருக்கு மருத்துவப் படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு வழங்க உள்ளதாக மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ இடங்களில் 69 சதவீதம் என்ற அடிப்படையில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெற திமுக போராடும். திமுகவின் நீண்ட போராட்டத்தால் ஓ.பி.சி பிரிவினருக்கு 27% வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சமூக நீதி என்ற லட்சியத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் அயர்ந்து விடாமல் திமுக தொடர்ந்து போராடும் என கூறியுள்ளார்.