
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக விஜயபாஸ்கர். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர். தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருளை லஞ்சம் வாங்கிக் கொண்டு தமிழகத்திற்குள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் பெயரும் அடிபட்டது. அதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று பல அரசியல் கட்சிகளும் அழுத்தம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் வழக்கு சம்மந்தமான கோப்புகளில் அமைச்சர் பெயர் நீக்கப்பட்டிருந்தது. இது சம்மந்தமான வழக்கு விசாரனையில் குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
சிபிஐ விசாரனை வரை குட்கா வழக்கு சென்றுள்ளதால் அமைச்சர் விஜயபாஸ்கர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று புதுக்கோட்டையில் திமுக மா. செ.கள் (பொ) ரகுபதி எம்எல்ஏ, லெப்பா்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆலங்குடி மெய்யநாதன் எம் எல் ஏ, தென்னலூர் பழனியப்பன், சந்திரசேகரன், புதுக்கோட்டை விஜயா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்.
திலகர் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயபாஸ்கர் பதவி விலக கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்ட நிலையில் நகர காவல் நியை போலிசார் கைது செய்தனர். வேனில் ஏற மறுத்து ஊர்வலமாக சென்றனர். கைது செய்யப்பட்டவர்களை சில்வர் ஹாலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.