Skip to main content

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இரண்டாவது முறையாக ஆய்வு!!

Published on 21/10/2018 | Edited on 21/10/2018

திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் இரண்டாவது முறையாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் தொல்லியல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்டவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

தமிழகம் முழுவதும் கோயில்களில் உள்ள சிலைகள் காணமல் போனது குறித்தும், ஆலயங்களில் இருக்கும் சிலைகள் உண்மையானதுதானா என்பது குறித்து தொல்லியல் நிபுணர்கள் மற்றும் சிலைகடத்தல் பிரிவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

 

statue

 

அந்தவகையில் திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் உள்ள உலோக திருமேனிகளுக்கான பாதுகாப்பு மையத்தில் 4359 த்திற்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் அனைத்தும் திருவாரூர்,  தஞ்சாவூர், நாகப்பட்டிணம், கடலூர். உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 626 சிறு ஆலயங்களுக்கு சொந்தமான ஐம்பொன் சிலைகள். அந்தசிலைகள் கோவில்களின் திருவிழாவின் போது அறநிலையத்துறை உதவி ஆணையர்அனுமதி பெற்று சிலைகளை தங்களின் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டு திருவிழா முடிந்தபிறகு மீண்டும் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. 

 

இந்நிலையில் பாதுகாப்புமையத்தில் உள்ள சிலைகளில் பல சிலைகள் மாற்றிவைக்கப்பட்டிருப்பதாக பல புகார்கள் எழுந்தபடியே இருந்தது, சிலை தடுப்புபிரிவு போலிஸாருக்கு ரகசியமான தகவல்களும் கொடுத்துவந்தனர். அந்த வகையில் தஞ்சை பெரியகோயிலில் ஆய்வு செய்த பொன்.மாணிக்கவேல் விரைவில் திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் ஆய்வு செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன்படியே முதற்கட்ட ஆய்வு கடந்த வாரம்நடந்தது. இன்று இரண்டாவது நாளாக ஆய்வை துவங்கியுள்ளனர்.

  

சிலையின் உண்மை தன்மை குறித்து இன்று சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன்  தலைமையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வில் மத்தியதொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன்  தலைமையில் 16 பேர் சிலைகளை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்விற்கு சிலை கடத்தல் பிரிவினர் உரிய பாதுகாப்பினை வழங்கி வருகின்றனர்.  

 

இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

 

‘’உலோகசிலைகளின் தொண்மை தன்மை குறித்து தொல்லியல் துறையின் மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.இதில் உலோக சிலைகள் மட்டுமே ஆய்விற்கு உட்படுத்தப்படுகிறது. கற்சிலைகள் ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைகளும் ஆய்வு செய்ய நீதிமன்ற உத்தரவுபடி இந்த ஆய்வானது மேற்கொள்ளப்படுகிறது..இங்கு நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் இருப்பதாக தகவல் கிடைத்ததின்பேரில் இந்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும்’’ என தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்