நீட் மற்றொரு படுகொலையை நிகழ்த்தி விட்டது என இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். கூலித் தொழிலாளியின் மகளான பிரதீபா 12 ஆம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 சதவீத மதிப்பெண்கள் எடுத்த பிரதீபாவுக்கு தனியார் மருத்துவக்கல்லூரியில் தான் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. தனியார் கல்லூரியில் சேரும் அளவிற்கு தனது பெற்றோர்களிடம் பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்து படிப்பில் சேரவில்லை.
தொடர்ந்து மனதைரியத்துடன் நீட் தேர்வுக்கான வகுப்புகளுக்கு சென்று இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் நேற்று, வந்த நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. அந்த விரக்தியில் மனமுடைந்த அவர் நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#நீட் மற்றொரு படுகொலையை நிகழ்த்தி விட்டது. கல்வி உரிமை மறுப்பு நம் ஒத்துழைப்புடனே நிகழ்த்துகிறார்கள்.வழக்கம்போல் படிக்க திறன் அற்றவர்கள் சாவதே மேல் என எழுதி தள்ளுவார்கள்.யாரிடம் நம்உரிமையை கேட்க்கிறோம் என்று உணராமலே தலைமுறை கனவை அடக்கம் செய்து நகர்வோம்..அடுத்த படுகொலைகள் நோக்கி!
— pa.ranjith (@beemji) June 5, 2018
இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது,
நீட் மற்றொரு படுகொலையை நிகழ்த்தி விட்டது. கல்வி உரிமை மறுப்பு நம் ஒத்துழைப்புடனே நிகழ்த்துகிறார்கள். வழக்கம்போல் படிக்க திறன் அற்றவர்கள் சாவதே மேல் என எழுதி தள்ளுவார்கள். யாரிடம் நம் உரிமையை கேட்கிறோம் என்று உணராமலே தலைமுறை கனவை அடக்கம் செய்து நகர்வோம்.. அடுத்த படுகொலைகள் நோக்கி!. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.