Published on 13/03/2019 | Edited on 13/03/2019

பொள்ளாச்சியில் பெண்களை ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கொடூரர்கள் குறித்து நக்கீரன் கடந்த சனிக்கிழமை வெளியான இதழில் வெளியிட்டிருந்தது. அந்த செய்தி அனைவரையும் உலுக்கியது. அதைத்தொடர்ந்து நக்கீரன் ஆசிரியர் அந்தக் கொடூரங்களை விளக்கும் வீடியோ கடந்த 11ம் தேதி வெளியானது. இந்த வீடியோவை தற்போது வரை யூடியூப்பில் 22,08,068 பேரும், ஃபேஸ்புக்கில் 27,00,000 பேரும் பார்த்துள்ளனர்.