மழைக்காலம் ஆனாலும், கடும் புயல் வீசிய தருணமானாலும், பெரும் வரட்சியான நேரத்திலும், பேராபத்து காலத்திலும் அரசாங்கத்தின் நிவாரணமோ, மக்கள் பிரதிநிதிகளின் உதவியோ கிடைப்பதற்கு முன்பே முதல் ஆளாக தனது உதவியை செய்துவிடுகிறார் சீர்காழி கிள்ளைரவீந்திரன். கரோனா பொதுமுடக்கதினால், முடங்கிப்போன அப்பாவி மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிவருவது பலதரபட்ட மக்களையும் பாராட்ட வைத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டவர் கிள்ளை ரவீந்திரன். திமுகவில் உள்ள சிலரின் உள்ளடியால் அதிமுக வேட்பாயரான பாரதி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். தோற்ற பிறகு மற்றவர்களை போல கிள்ளை ரவீந்திரனும் தொகுதி பக்கம் தலைகாட்டமாட்டார் என கணக்குப்போட்ட திமுக, அதிமுகவினருக்கு, தோற்றப்பிறகும் தினசரி கட்சிக்காரர்கள் வீட்டு சுக, துக்க நிகழ்வுகளிலும், கோயில் திருவிழாக்களிலும் கலந்துகொண்டது பெருமூச்சுவிடவே செய்தது.
கஜா புயல் ஒட்டுமொத்த வங்க கடலோர பகுதியும் புரட்டிப்போட்டது, வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவந்த மக்களின் ஒவ்வொருவரின் வீடாகச்சென்று, அரிசி, மளிகை பொருட்கள், பாய், தளகானி, உடை, என தேவையான நிவாரணப்பொருட்களை வழங்கினார். இதை கண்ட அதிமுகவினரே ஆத்திரமடைந்தனர்.
அதன்பிறகு கரோனா எனும் கொடிய வைரசால் முடங்கிக்கிடந்த அப்பாவி மக்களுக்கு அரிசி காய்கறிகள் மளிகை பொருட்கள் என இன்றுவரை கொடுத்துவருகிறார். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பார்வை இல்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் என யாரையும் விட்டுவிடாமல் அவர்களின் வீடுகளுக்கே சென்று ,அரிசி, மளிகை, காய்கறிகள், உள்ளிட்ட பொருட்களை வழங்கிவருகிறார்.
இந்த நிலையில் குடிசைகளை அதிகம் கொண்ட சீர்காழி தொகுதியில் அடிக்கடி குடிசைகள் மின்கசிவு, உள்ளிட்ட ஏதாவது ஒரு காரனத்தால் தீக்கிரையாகிவிடுவது தொடர் நிகழ்வாகவே இருக்கிறது. வீடு, உடமை உள்ளிட்டவற்றை இழந்து தவிக்கும் அவர்களுக்கு ஆறுதலாக கிள்ளைரவீந்திரனின் உதவி முதல் உதவியாக இன்றுவரை சென்றுவிடுகிஸது.
அந்த வகையில் நேற்று சீர்காழி சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரனின் கூரை வீட்டில் மின் கசிவின் காரணமாக தீ பற்றி எரிந்தது,தீ பரவி பக்கத்து வீட்டை சேர்ந்த சாந்தி என்பவரது வீடு உட்பட 6 வீடுகள் எரிந்து நாசமானது. அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து. நிவாரண உதவிகள் வழங்கியிருக்கிறார். அந்த கிராமம் சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ பாரதியின் சொந்த கிராம பகுதியானாலும், அவர் இன்னும் ஆறுதலுக்காக கூட வந்துபார்க்கவில்லை, ஆனால் தோற்றுப்போனாலும் மறக்காம வந்து உதவுறீங்க என ரவீந்திரனுக்கு கைக்கூப்பி நன்றி கூறினர் அந்த மக்கள்.
இது குறித்து வழக்கறிஞரும், திமுக பிரமுகருமான கிள்ளைரவிந்திரன் கூறுகையில்," வெற்றி தோல்வி என்பது ஜகஜம், ஆனால் சீர்காழி தொகுதி மக்களின் அன்பு எப்போதும் எனக்கு உண்டு, அவர்களில் நானும் ஒருவன், அடுத்து தளபதியார் தலைமையில் ஆட்சி மளரும், சீர்காழி மக்களின் துயரமும் தீரும், அதுவரை தன்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறேன், இது உதவி அல்ல அவர்களுக்கு செய்யும் கடமை. ஸ்டாலினின் கட்டளைபடி இயன்றவரை கொடுத்துவருகிறேன்." என்கிறர் ஆர்வத்துடன்.