Published on 23/11/2020 | Edited on 23/11/2020
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது.
இதில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தல், தேர்தல் அறிக்கை தயாரித்தல் முதலியவை பற்றி கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி, டி.ஆர்.பாலு உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கைது செய்யப்படுவதால் அதுகுறித்தும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையல் அதுபற்றியும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், எத்தனை தடைகள் வந்தாலும் தேர்தல் பரப்புரைதொடரும் என்றும், அடக்குமுறை கண்டு திமுக அஞ்சாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.