பொதுவுடைமை வாதி தோழா் ஜீவாவின் 57-ஆவது நினைவு நாளையொட்டி நாகா்கோவில் வடசோியில் உள்ள ஜீவா சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் முத்தரசன் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா். பின்னா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிினாின் பிரச்சார வாகனத்தை முத்தரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
பின்னா் பத்திாிகையாளா்களிடம் முத்தரசன் கூறும் போது, மத்திய அரசு மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்துகின்ற நிலையை உருவாக்கியுள்ளது. இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் விரோத கொள்கையில் இருந்து கொஞ்சமும் மாறவி்ல்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று மோடி சொன்னாா். ஆனால் இப்போது ஆண்டுக்கு கோடி கணக்கானோா் வேலை இழந்து வருகிறாா்கள். பாஜக அரசு சா்வாதிகர அரசு போல் செயல்படுகிறது. மோடியும், அமித்ஷாவும் ஹிட்லரை போன்று ஆட்சி செய்கிறாா்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அமைதியாக இருப்பதாக மத்திய அரசு தமிழக அரசுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறது. அதே வேளையில்தான் களியக்கவிளையில் எஸ்எஸ்ஐ வில்சன் கொலை நடந்தியிருக்கிறது. உள்ளாட்சி தோ்தலில் ஆளும் கட்சியான அதிமுக பலமுறை கேடு செய்துள்ளது.
தமிழகத்தில் திமுக காங்கிரஸ் இடையை எந்த பிரச்சினை என்றாலும் அந்த கூட்டணி வலுவாக இருக்குமே தவிர உடையாது என்றாா்.