![sd](http://image.nakkheeran.in/cdn/farfuture/4OigEvpDUsUaIkOdgLjAOg9qRR-C0LvBAZTYNVffho4/1614260692/sites/default/files/inline-images/fd_18.jpg)
திமுக, காங்கிரஸ் கூட்டணியால் மக்களுக்கு நல்லாட்சி தரமுடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வந்த பிரதமர் மோடி கோவையில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கொடிசியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், திமுக, காங்கிரஸ் கட்சிகளைக் கடுமையாகச் சாடினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "திமுக, காங்கிரஸ் அரசுகள் நீண்ட நாட்களாக ஆட்சியில் இருந்தார்கள். ஆனால், மக்களுக்காக அவர்கள் செயல்பட்டனரா என்றால் சுத்தமாக இல்லை. திமுக தன் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து 25 ஆண்டுகள் ஆகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்டு பிராந்தியக் கட்சியாக திமுக உள்ளது. இந்த தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணியை மக்கள் நிராகரிக்க வேண்டும். மக்களுக்காக பாஜக அரசு இந்த 7 ஆண்டுக் காலத்தில் நிறைய நலத்திட்டங்களை செய்துள்ளது. இதனைத் தமிழகத்திலும் தொடர ஒரு வாய்ப்பு தரவேண்டும்" என்றார்.