Published on 26/07/2020 | Edited on 27/07/2020
![vijayakanth](http://image.nakkheeran.in/cdn/farfuture/MItGzto_VW73wcdpo4w3zHLHL5gdWFiUUmzwpN9nR24/1595775905/sites/default/files/inline-images/dcccv_0.jpg)
கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வெளியான வீடியோ காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தி தற்பொழுது சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது நிலைப்பாடுகளை தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக இது பெரும் விவாத பொருளாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆடி மாத சஷ்டி விரதத்தை முன்னிட்டு மௌனமாக கந்த சஷ்டி கவசம் படிக்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.