Published on 21/09/2022 | Edited on 21/09/2022
தரமற்ற சாலையை செப்பனிடப்படுவதாகக் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், இறச்சகுளத்தில் இருந்து துவரங்காடு செல்லும் சாலையைச் செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கான ஒப்பந்தம் கேட்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பழைய சாலையைத் தோண்டி அப்புறப்படுத்தாமல் தரமற்ற முறையில் செப்பனிடுவதாகக் கூறி நாம் தமிழர் கட்சியினர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கு சென்ற ஒப்பந்ததாரர் கேட்சன், தடிக்காரன்கோணம் ஊராட்சி மன்றத் தலைவர் பிராங்கிளிங் உள்ளிட்டோர் நாம் தமிழர் கட்சியினரை விரட்டி அடித்தனர். அப்போது, பிராங்கிளிங் ஒருவரை கன்னத்தில் அறைந்த காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.