Published on 23/05/2022 | Edited on 23/05/2022

இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் டி.ராஜேந்தர். அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 19ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது அவர் நல்ல முறையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.