ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் என 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழகரசு முடிவெடுக்க வேண்டும்மென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகரசின் சார்பில் கவர்னர்க்கு அமைச்சரவை தீர்மானம் இயற்றப்பட்டு கவர்னர் முடிவெடுக்கவில்லை.
இந்நிலையில் அவர்களை பரோலில் விடுவிக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். இரண்டு ஆண்டுக்கு முன்பு பேரறிவாளன், தனது தந்தை குயில்தாசன் என்கிற ஞானசேகரனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து 30 நாள் பரோலில் வெளியே வந்தார். பின்னர் அது மேலும் 30 நாள் என நீட்டிக்கப்ட்டது.

தற்போது கடந்த நவம்பர் மாதம், தனது சகோதரியின் மகள் திருமணம், தனது தந்தையின் உடல்நிலையை காரணம் கட்டி ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார். பின்னர் மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. அந்த 60 நாள் பரோல் ஜனவரி 11ந்தேதியோடு முடிந்ததை தொடர்ந்து ஜனவரி 12ந்தேதி காலை திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னை புழல் சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.
இவர்களது விடுதலை தொடர்பாக கவர்னர் எந்த முடிவும் எடுக்காததால் சிறைவாசி நளினி தொடுத்த வழக்கில், அவர்களை விடுதலை செய்ய முடியாது என மத்தியரசு முடிவெடுத்துள்ளது என நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது மத்தியில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜக.