திண்டுக்கல்லில் புதிதாக அமைய உள்ள மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நிகழ்ச்சிக்கு நேற்று (14.03.2020) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார்.
முன்னதாக மதுரையில் இருந்து திண்டுக்கல் வரும் வழியில் அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் அடியனூத்து கிராமம் ஒடுக்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர், மேடைக்கு அருகில் உள்ள பகுதியில் நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில் கலந்து அடிக்கல் நாட்டினார்.
அதைத் தொடர்ந்து விழா மேடைக்கு வருகை தந்த முதலமைச்சர் ரூ.327 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள மருத்துவ கல்லூரிக்கான கல்வெட்டு திறந்து வைத்தார். வேளாண்மைத் துறை, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, சுற்றுலாதுறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றின் சார்பில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 45 கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் சீனிவாசன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் தமிழக முதல்வர் பேசுகையில், "எம்ஜிஆர் அவர்களால், உருவாக்கப்பட்ட மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் பூட்டுக்கு பெயர் பெற்ற திண்டுக்கல் மாவட்டம். இங்கு 3500 சிறு குறு தொழில்கள் உள்ளன. திண்டுக்கல் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, திண்டுக்கல்லில் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ், 5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம். பல்லாயிரக்கணக்கான மனுக்கள், தமிழகம் முழுவதும் இருந்து வந்த நிலையில், அவைகள் அனைத்தையும் 3 மாதத்தில் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து முதியோர் உதவி தொகை கேட்டு சுமார் 9 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில், 5 லட்சம் மனுக்களுக்கான பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு, திண்டுக்கல் முழுவதும், 35 ஆயிரம் மடிக்கணினிகள், தமிழகம் முழுவதும் 51,67,19 மடிக்கணினி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இது எந்த மாநிலத்திலும் கொடுக்கவில்லை.
தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளுக்கு, குடும்ப அட்டை தாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்கிய அரசு. திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்கள் விஞ்ஞான கல்வி கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இதுவரை 51 லட்சத்து 67 ஆயிரத்து 19 மாணவ, மாணவியருக்கு 7, 241 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வந்த வல்லரசு நாடுகளில் கூட மாணவர்களுக்காக இவ்வளவு பெரிய மடிக்கணினி வழங்கப்படவில்லை. நிலத்தடி நீர் உயர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நிலத்தடி நீர் உயர மழை நீர் சேகரிப்பு செய்ய உத்தரவிட்ட அரசு, பழனி திருக்கோவில் அமைந்த பகுதியை நவீன படுத்த 58 கோடி நிதி ஒதுக்கி, பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
திருப்பதி போல பழனி கோவிலும் நவீன வசதிகள் கொண்ட கோவிலாக அமையும். இந்தியாவில் ஒவ்வொறு துறையிலும், தமிழ்நாடு முதன்மை பெற வேண்டும் என்பது எனது விருப்பம் என்றும், அம்மாவின் அரசு வழங்கிய விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2247 கோடி ரூபாய் வழங்கியது அதிமுக அரசு.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், வெள்ளம், புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் ஒரே அரசாக தமிழக அரசு திகழ்கிறது. விவசாயிகளுக்கு 7802 கோடி ரூபாய் பயிர் காப்பீடாக அரசு வழங்கியது. படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 170 கோடி ரூபாய் வழங்கியது. சேலம் தலைவாசல் பகுதியில், ஆசியாவிலே மிகப்பெரிய கால்நடை பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. கலப்பின ஆடுகள் வளர்த்தால் அதிக எடையுடன் கூடிய ஆடுகளை உருவாக்கவும், கலப்பின பசுக்கள் மூலம் அதிகம் பால் சுரக்கும் பசு மாடுகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிதி உதவியுடன், தமிழகத்தின் பல்வேறு இடங்களில், 205 கோடி ரூபாய் செலவில் காய்கறி சந்தைகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். கல்வி பயில்பவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்ந்து, உயர் கல்வி கற்பவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
கல்விக்காக அதிகமான நிதி ஒதுக்குவதிலும் தமிழகமே முதலிடம். உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 54 சதவீதமாக உயர அதிமுக அரசே காரணம்.
தமிழகத்தில் புதிதாக துவக்கப்படும் 11 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படுவதன் மூலம் 1650 பேர் கூடுதலாக மருத்துவம் பயில முடியும் தனியாரை விட கூடுதல் வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனை கரூர் உள்ளது என்றும், அதே போல திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியும் அமையும்.
இவ்வளவு திட்டங்கள் கொடுத்தும், எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் எதுவுமே செய்யவில்லை என பச்சை பொய் இந்த கல்வி ஆண்டில் மருத்துவ கல்லூரயில் 350 இடங்கள் கூடுகளாக பெற்று சாதனை மேல் சாதனைகளை செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக உள்ளது இந்த ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என பச்சைப் பொய் சொல்கிறார்.
முத்து முத்தான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவிலேயே 70 சதவிகிதம் அரசு மருத்துவ மனையில் பிரசவம் நடக்கும் இடம் தமிழகம் என்றும் 90 சதவிகிதம் மருத்துவத்துறையில் காலி பணியிடனங்கள் நிரப்பட்டுள்ளன மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணாக்கர்கள் மக்களுக்கு சேவை மனப்பானமையுடன் பணியாற்ற வேண்டும்.இதுவே அரசுக்கு செய்யும் கைமாறாக இருக்கும். அதிமுக திண்டுக்கல்லில் பெற்ற வெற்றிதான் தமிழகம் முழுவதும் பரவியது.
எம்ஜிஆரின் செல்வாக்கு என்னவென்று காண்பித்த மாவட்டம் திண்டுக்கல் இது உங்கள் அரசு, மக்கள் அரசு, மக்களின் தேவை என்னவென்று அறிந்து செயல்படும் அரசு அம்மா அரசு என்றும் 30 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்து வரலாறு படைத்த இயக்கம் அதிமுக என்றும், ஏழை மக்களுக்காக பாடுபடும் அரசு என்றும், கரோனா வைரஸ் என்பது உலகையே அச்சுறுத்தி வருவதாகவும், தமிழகத்தில் இது வரை பெரிய பாதிப்பில்லை என்றும், சுகாதாரத்துறை அறிவுறுத்தியது போலவும், ஊடகத்தின் மூலம் செய்யப்படும் விழிப்புணர்வை கடைபிடிக்க வேண்டும் என்றும், கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்றும், காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் கரோனா பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் குணமடைந்துள்ளார்.தமிழக அமைச்சரவையிலேயே மிகவும் மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் என்றும், எந்த அமைச்சராலும் செய்யமுடியாத நகைச்சுவை உணர்வை தூண்டி அனைவரையும் சிரிக்க வைக்க கூடிய திறமை" படைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் என்று கூறினார்.