
கேள்வி அண்ணா அறிவாலயத்தில் எம்ஜிஆர் படத்தை வைக்க சொல்வாரா ரஜினிகாந்த் என டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
எது எங்கே வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது அவரவர் கட்சிகளின் விருப்பம். அதிமுக விழாவில் கலைஞர் புகைப்படத்தை வைக்க சொல்லும் நீங்கள் எங்கிருந்து சென்னீர்களோ, அவர்களிடமே அறிவாலயத்தில் எம்.ஜி.ஆர் படத்தை வைக்க சொல்ல முடியுமா? அவர் புரிந்து கொண்டு பேசுகிறாரா இல்லையா என்பது தெரியவில்லை.
எம்.ஜி.ஆர் படத்தை அறிவாலயத்திலும், மற்ற இடங்களிலும் ஸ்டாலினிடம் வைக்க சொல்லுவாரா? இதை தேவையில்லாத பேச்சாக நான் கருதுகிறேன். எதற்காக இப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.