தமிழகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மக்களை அதிகமாக பாதிப்படையச் செய்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் 24ஆம் தேதிமுதல் 30ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மக்கள் அத்தியாவசியப் பொருட்களைத் தடையில்லாமல் பெற வேண்டும் என்பதனைக் கருத்தில்கொண்டு, நடமாடும் காய்கறிக் கடைகள் மூலம் மக்களுக்குத் தேவையான காய், கனி, அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றைக் கிடைக்கப்பெற வைக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்க வியாபாரிகள் வராததால், காய்கள் பெருமளவில் வீணாகி குப்பையில் கொட்டுகின்றனர். மேலும், அரசு அறிவித்த நடமாடும் காய்கறிக் கடைகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.