திருவாரூரில் இரண்டு குழந்தைகள் உட்பட 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டு அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் திருவாருர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் 2 குழந்தைகள் உட்பட 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டு அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
"காய்ச்சலுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளதாகவும் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை தனி வார்டில் வைத்து சிறப்பு சிகிச்சை அளித்து வருவகிறோம்," என்கிறார் மருத்துவ கல்லுரி மருத்துவமனையின் முதல்வர் விஜயகுமார்.