Skip to main content

மத்திய அரசை கண்டித்து நல்லகண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 


சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பீமா கோரேகான் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனே விடுதலை செய்ய கோரியும், உபா சட்டத்தை திரும்ப பெறவும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், விசிக தலைவர் திருமாவளவன், திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுவை சந்தித்த சிவகுமார்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
sivakumar meets nallakannu

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, இன்று 99வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. முதல்வர் மு.க. ஸ்டாலின், “99 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்! ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு, நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். 

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அவரது எக்ஸ் தள பதிவில், “விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவே கால் நூற்றாண்டுக் காலம் செயல்பட்ட எளிமையின் எடுத்துக்காட்டான தலைவர் தோழர் நல்லகண்ணு பிறந்தநாள் இன்று. 18 ஆம் வயதில் தொடங்கிய சிவந்த அரசியல் வாழ்க்கையை இந்த 98 ஆம் வயதிலும் தொடரும் பேராளர் ஐயா நல்லகண்ணு. தனக்கென்று ஒரு நொடியையும் பயன்படுத்திக்கொள்ளாதவர்; தனக்கென்று ஒரு நிதியையும் எடுத்துக்கொள்ளாதவர்; அனைத்துமே தான் கொண்ட கொள்கைக்காகவும் தன் கட்சிக்காகவும் என்றே பெரும் தியாக வாழ்வு வாழும் தலைவருக்கு என் பெருமதிப்போடு கூடிய பிறந்தநாள் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே சிவக்குமார் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த சிவக்குமார் அவரின் காலில் விழுந்து ஆசியும் பெற்றுக்கொண்டார். 

Next Story

"சமூகத்தை இணைக்க வேண்டும்" - விஜய் சேதுபதி படத்துக்கு நல்லகண்ணு பாராட்டு

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

nallakannu about vijay sethupathi Yaadhum Oore Yaavarum Kelir movie

 

விஜய் சேதுபதி நடிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கடகிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க, மகிழ் திருமேனி வில்லனாக நடித்துள்ளார். மேலும் விவேக், மோகன்ராஜா, ரித்விகா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். 

 

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளிச்சென்றது. இந்நிலையில் மே 19 ஆம் தேதியான நாளை ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் ப்ரிவியூ ஷோ நடந்த நிலையில் அதில் படக்குழுவினருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்னு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

படத்தை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நல்லகண்ணு, "யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தலைப்பை கேட்டவுடனே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. காரணம் நமது தமிழ் இலக்கியத்தில் மற்றும் சங்க இலக்கியத்தின் முதல் வரி. இன்று ஐக்கிய நாடுகள் சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றுதான் போடப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழுக்குரிய பெருமையையும் தமிழ் இலக்கியத்திற்குரிய பெருமையையும் அடையாளம் காட்டியிருக்கிறது. அந்த மகிழ்ச்சியிலேயே படத்தை பார்க்க வேண்டும் என முடிவுக்கு வந்தேன்.

 

விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினர் நல்ல முயற்சி எடுத்துள்ளார்கள். இந்திய நாட்டில் இன்று சமூகம் மாறிக் கிடக்கின்றது. இன்றைக்கு இலங்கையில் உள்ள பிரச்சனைகளை தமிழ்நாட்டிலும் பேசுகிறார்கள். அதே போல் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனையை வெளியுலகத்தில் பேசுகிறார்கள். இப்படி பிரிந்து கிடக்கும் சமூகத்தை ஒரு இசையிலோ அல்லது சொல்லாலோ இணைக்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கிய இப்படத்தை பாராட்டுகிறேன்" என்றார்.