Published on 30/11/2018 | Edited on 30/11/2018


ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 29 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் நேற்றும், இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லும் போராட்டம் நடைப்பெற்றது. இந்த பேரணியை தடுப்பதற்கு போலீசார் ஏராளமான பேரிகார்டுகளை வைத்து தடுத்தனர். இருப்பினும் விவசாயிகள் அதனையும் தாண்டி பேரணியாக சென்றனர்.
போலீசாரின் தடையை மீறி பேரணி செல்வோம் என்று தமிழக விவசாயிகள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சென்ற விவசாயிகள் கூறியுள்ளனர்.