Skip to main content

கூட்டத்தொடரின் முதல் நாள்- ஆளுநர் வெளிநடப்பு; அதிமுக வெளியேற்றம்

Published on 06/01/2025 | Edited on 06/01/2025
Day 1 of the session- Governor's walkout; AIADMK walkout

2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என அனைவரும் சட்டப்பேரவை வளாகத்தில் கூடினர். சட்டப்பேரவைக்குள் வந்த அதிமுக எம்எல்ஏக்கள் 'யார் அந்த சார்'? என்ற பேஜ் அணிந்து கொண்டு வருகை புரிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதேபோல் வந்திருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து புறப்பட்டு சென்றார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் ஆளுநர் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முந்தைய காலங்களில் தமிழக அரசு கொடுத்த உரையை ஆளுநர் திருத்தங்கள் செய்து வாசித்தது பேசுபொருளாகி இருந்தது. இதற்காக ஆளுநர் மீது சட்டப்பேரவையிலேயே பல்வேறு எதிர்வினைகளை தமிழக அரசு செய்திருந்தது. இதனால் ஆளுநர் பாதியிலேயே உரையை முடித்துக் கொண்டு சட்டப்பேரவையில் இருந்து கிளம்பிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது  குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்