Published on 20/04/2021 | Edited on 20/04/2021
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அதனை தடுக்க தமிழக அரசு கடந்த 10ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் கரோனா பரவல் குறையவில்லை. இதன் காரணமாக தமிழக அரசு மேலும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.
அதன்படி கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (20.04.2021) முதல் மறு உத்தரவு வரும்வரை இரவு நேர ஊரடங்கு, கடற்கரைக்குச் செல்ல தடை, பூங்காக்களுக்குச் செல்ல தடை, சுற்றுலா தலங்களுக்குச் செல்ல தடை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பன போன்ற புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல தடை விதித்திருக்கும் நிலையில், முன்னெச்செரிக்கையாக தடுப்புகள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.