தமிழகத்தில் இன்று (24.05.2021) காலை 10 மணிமுதல் முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட உள்ளதாக நேற்று முன்தினம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பின்னர் அறிவித்திருந்தார். எனவே நேற்று காலைமுதல் இரவு 9 மணிவரை அனைத்துக் கடைகளும் திறந்திருக்கும் என்றும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி பத்திரப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், இந்த ஒருவார தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு சமாளிக்க நேற்று காலைமுதல் இரவுவரை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம் அனைத்து வணிக நிறுவனங்களும் நிரம்பி வழிந்தனர். இப்படிப்பட்ட இந்தக் கூட்டத்தைப் பார்த்த விற்பனையாளர்கள் பலர் ஒருகிலோ தக்காளி பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று மட்டும் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு தேங்காய் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் அது 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒருகிலோ வெங்காயம் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது 75 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. இப்படி விற்பனையாளர்களும் தங்களுடைய பங்கிற்கு மக்களை இந்தக் கரோனா காலத்தில் வஞ்சித்துள்ளனர்.