மத்திய பா.ஜ.க. அரசு சென்ற ஆட்சியில் கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரியால் இந்தியா முழுக்க சிறு குறு தொழில்கள் முடங்கி விட்டன. அந்த ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி இன்று இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் ஒன்றிணைந்து டெல்லி நாடாளுமன்றம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"ஜி.எஸ்.டி.வரியை திரும்ப பெற வேண்டும், சிறு குறு தொழில்களை பாதுகாக்க வேண்டும், தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும், பன்னாட்டு வர்த்தக இறக்குமதி உள்ளுர் வணிகத்தை பாதிக்காதவாறு முறைப்படுத்த வேண்டும்" என பல கோரிக்கைகளை முழக்கமிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழகத்தின் எம்.பி.க்களான திருப்பூர் கப்பராயன், நாகை செல்வராசு, கோவை நடராஜன், மதுரை வெங்கடேசன் டி.ராஜா,, டி.கே.ரங்கராஜன் உட்பட 10 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.