![villupuram](http://image.nakkheeran.in/cdn/farfuture/to8qiTkllU--4lU8YOmac40-F3wR17W0XO3z38wDh0k/1588908947/sites/default/files/inline-images/615_2.jpg)
விழுப்புரம் நகரை ஒட்டியுள்ளது காகுப்பம் ஆயுதப்படை பயிற்சி மையம். இங்கு காவலர்களுக்குத் தேர்ச்சி பெறுபவர்களுக்குப் பயிற்சி அளிப்பதும் பயிற்சி முடித்தவர்கள் இங்கே தங்க வைப்பதும் என இங்கு ஆயிரக்கணக்கான ஆண், பெண் பயிற்சி காவலர்கள் பயிற்சி முடித்தவர்கள் வசிக்கும் பகுதி.
அப்படிப்பட்ட பரபரப்பான இந்தப் பயிற்சி மையம் நேற்று இழுத்து மூடப்பட்டுள்ளது. காரணம் உளுந்தூர்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்துவரும் காவல்துறை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், காவலர் தகுதிக்குத் தேர்வு செய்யப்பட்டு அவர் காகுப்பம் ஆயுதப் பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இவர் பயிற்சிக்காக உளுந்தூர்பேட்டையில் உள்ள அவர்களது போலீஸ் குடியிருப்பில் இருந்து அவ்வப்போது ஆயுதப்படை பயிற்சி பள்ளிக்குப் பயிர்ச்சிக்காக வந்து சென்றுள்ளார்.
அந்தப் பெண்ணுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து காகுப்பம் பயிற்சி மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதேபோன்று அந்தப் பெண்ணின் பெற்றோருடன் வசித்து வந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் குடியிருப்பு பகுதியும் மூடப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்குப் பயிற்சி கொடுத்த பயிற்சியாளர்கள் மற்றும் அவருடன் பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள், அதேபோல் அவரது குடும்பத்தினர், அவர்களுக்கு நெருக்கமான உறவினர்கள் ஆகியோர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறவுள்ளது.