Published on 06/04/2020 | Edited on 06/04/2020
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
![CORONAVIRUS INDIA 4 THOUSANDS MAHARASHTRA](http://image.nakkheeran.in/cdn/farfuture/x0WBmqIM-atK_6iY_Gjrxf1rYxCN0tS7qscJUspEjJU/1586146155/sites/default/files/inline-images/I1_2.jpg)
இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4,067 ஆக அதிகரித்துள்ளது.இதில் 109 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 292 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 690, தமிழகத்தில் 571, டெல்லியில் 503 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 42 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த நிலையில், 45 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.