Published on 11/04/2020 | Edited on 11/04/2020
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.
![CORONAVIRUS CHENNAI GOVT HOSPITAL](http://image.nakkheeran.in/cdn/farfuture/21858QMwmSGs2tlz2s120dzePbV9WadKtgM8Y7CqmtA/1586591202/sites/default/files/inline-images/CHENNAI9.jpg)
இந்த நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 84 வயது மூதாட்டி சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 84 வயது மூதாட்டி, 54 வயது பெண், 25 வயது இளைஞர் ஆகியோர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து மூன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.