சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. 125 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பாதிப்பால் இது வரை 5,000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதேபோல் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,37,000 பேருக்கு மேல் உள்ளது. இந்தியாவிலும் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அனைத்து நாடுகளும் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளன.
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கரோனா எதிரொலியால் அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். வழக்கறிஞர்களின் கோரிக்கை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளருடன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஆலோசனை நடத்தி வருகிறார்.