Skip to main content

‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு அனுமதிக்ககூடாது’ - பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
je

 

விவசாயத்தையும், விவசாய நிலங்களையும் அழிக்ககூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த கூடாது மாநில  அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்.

 

திருவாரூர் அருகே உள்ள கடம்பங்குடியில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.  அந்த போராட்டத்திற்காக ஓ.என்.ஜி.சி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கிற்காக இன்று மாவட்ட நீதிமன்றத்தில்  மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் ஆஜரானார். இந்த வழக்கு வரும் அக்டோபர் 31ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

 

அங்கிருந்த வெளியில் வந்த பேராசிரியர் ஜெயராமன் செய்தியாளர்களிடம்,   ‘’காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த கூடாது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் விளை நிலங்கள் அழிக்கப்பட்டு வேளாண்மை நிறைந்த காவிரி டெல்டா பாலைவனமாக மாறும் சூழல் ஏற்படும். எனவே இத்திட்டத்தை நடைமுறைபடுத்துவதை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும்.

 

கச்சா எண்ணெய் எடுப்பது என்ற பெயரால் காவிரிப்படுகையில் உள்ள விவசாய நிலத்தை பாழ்படுத்தி அழிக்க மத்திய அரசு முயற்சிப்பது அநியாயமானதாகும். விவசாயத்தையும், விவசாயிகளையும், இயற்கையையும் அழித்துவிட்டு கச்சா எண்ணெய் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா முழுவதும் விரைவில் ஒற்றை ஆணையம் அமைத்து மாநில அரசின் நீர் உரிமையை பறிக்கும் வகையில் மத்திய அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒற்றை ஆணையம் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்’’ என்றார்.

 

சார்ந்த செய்திகள்