







Published on 29/11/2019 | Edited on 29/11/2019
சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பும், புராண சிறப்பும் கொண்டுள்ள இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதுமிருந்து பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருவதுண்டு. சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களை நம்பி ஏராளமன நடைபாதை வியாபாரிகள் வாழ்ந்து வருகின்றனர். இன்னிலையில் கோவிலுக்கு செல்லும் நடைபாதைகளில் அமைக்கப்பட்டிருந்த கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததால் நேற்று(28.11.2019) புக்லைன் இயந்திரத்துடன் மயிலாப்பூர் வந்த மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் கடைகளை அகற்றினர்.