



Published on 02/03/2021 | Edited on 02/03/2021
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கீடு ஆகியவை முக்கிய அரசியல் கட்சிகளால் கூட்டணி கட்சிகளுக்குத் துரித கதியில் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், திமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று (02.03.2021) முதல் நேர்காணல் செய்யப்பட இருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த நேர்காணல் வரும் 6ம் தேதி வரை நடக்கும் என்றும் அக்கட்சி தலைமை அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.