Published on 20/08/2022 | Edited on 20/08/2022
துணைவேந்தர் நியமன மசோதா குறித்து விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்புவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்துக்கு புறம்பானது. துணைவேந்தர்களை அரசே நியமித்தால் அது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் கலந்தாலோசிக்கவில்லை என்பதால் மசோதா கொண்டு வரப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார். ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்பட்டிருந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கங்களைக் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.