Published on 19/05/2021 | Edited on 19/05/2021
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் பரவல் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பல மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் சந்திக்கும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட அமைச்சர்களின் உதவியோடு மேற்கொண்டு வருகிறது.
அதில், முதற்கட்டமாக கரோனாவால் பாதிக்கப்பட்டு வருவோருக்குப் படுக்கை வசதி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் வசதியிடம் கூடிய படுக்கை வசதிகளைத் தனியார் நிறுவனங்களின் உதவியோடு தமிழக அரசு அமைத்து வருகிறது. அந்தவகையில், ராயப்பேட்டை வெஸ்லி பள்ளி மைதானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட கரோனா நோயாளிகளுக்கான பாதுகாப்பு மையத்தை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.