கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் வீட்டில் வருமான வரிச்சோதனை நடத்தியது. அந்த சோதனையில் விஜய் வீட்டில் கோடி கோடியாக பணம் எடுத்திருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டது. ஆனால் வருமான வரித்துறை விஜய் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் பணமோ ஆவணமோ பறிமுதல் செய்யப்படவில்லை என்று அறிக்கை வெளியிட்டது.
![actor vijay sethupathy and kasthuri tweet](http://image.nakkheeran.in/cdn/farfuture/_7dorm2GYeM_uov77Ws3mI46wsmO2Th349gDpgob6n0/1581579102/sites/default/files/inline-images/111111_98.jpg)
இதேபோல் விஜய் சேதுபதி மதம் மாற்றப்பட்டுவிட்டார் என்று சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘போயி வேற வெல இருந்தா பாருங்கடா’ என்று விஜய் சேதுபதி குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவர் கூறிய ‘போயி வேற வெல இருந்தா பாருங்கடா’ என்ற வார்த்தை ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.
Dear @sash041075 pls register the title “போய் வேற வேல இருந்தா பாருங்கடா” immediately.
— CS Amudhan (@csamudhan) February 12, 2020
இந்நிலையில் 'தமிழ்ப்படம்' படத்தை இயக்கிய சிஎஸ் அமுதன் விஜய் சேதுபதி சொன்ன போய் வேற வேலை இருந்தா பாருங்கடா என்ற வாசகத்தை உடனே டைட்டிலாக பதிவு பண்ணுங்க என்று ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் சசிகாந்த்துக்கு டேக் செய்து ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளார். இந்த பதிவிற்கு சிறித்து விட்டு போன கஸ்தூரி இதற்கு ஒரு படி மேலே சென்று, தனது ட்விட்டர் பக்கத்தில் "வேற வேலை இருந்தா பாருங்கடா... *இருந்தா* "டா" என்று குத்திக்காட்டியுள்ளார். இந்த பதிவால் கடுப்பான நெட்டிசன்கள் கஸ்தூரியை கமெண்ட் மூலம் வறுத்தெடுத்து வருகின்றனர்.
போயி வேற வேலை இருந்தா பாருங்கடா...
— Kasturi Shankar (@KasthuriShankar) February 12, 2020
*இருந்தா*
"டா" ??????#VijaySethupathi #epic @VijaySethuOffl