Skip to main content

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் கடலூர் மாவட்டத்தில்  3 இடங்களில் நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்!

Published on 19/06/2018 | Edited on 19/06/2018
rail

 

கடலூர் மாவட்டத்தில் தாம்பரம் - நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தக்கோரி கடலூரில் அனைத்துக் குடியிருப்போர்  நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 


தாம்பரம் திருநெல்வேலி  இடையே முன்  பதிவில்லா அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் தொடங்கப்பட்டது. தாம்பரத்திலிருந்து இரவு 12.30 மணிக்கு புறப்படும் அந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம்,  தஞ்சாவூர், திருச்சி, மதுரை  வழியாக பகல் 3.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது.  அதேபோல் மாலை 5.30 மணிக்கு  திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம்  சென்றடைகிறது. 16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் முழுவதும் முன்பதிவு இல்லாத பயணத்திற்கானது.

ஏழைகளின் ரதம் என்றழைக்கப்படும் இந்த ரயில் பாமர, நடுத்தர மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு  ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடலூர் மாவட்டத்தை கடந்து சென்றாலும் மாவட்டத்தில் எந்த இடத்திலும் இந்த ரெயில் நிற்கவில்லை. அதனால்  மாவட்ட தலைநகரான கடலூர், வர்த்தக நகரமான பண்ருட்டி, கோயில் நகரமான சிதம்பரம் ஆகிய நகரங்களில் அந்தியோதயா ரெயில் நிற்க வேண்டுமென மாவட்ட சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த வாரம் நெய்வேலி வந்த நிலக்கரித்துறை மற்றும் ரெயில்வே இணையமைச்சர் பியூஸ்கோயலிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 
இந்நிலையில் மாவட்டத்தில் அந்தியோதயா ரெயில் நிற்க வலியுறுத்தி கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டு, கடலூர், பண்ருட்டி, சிதம்பரம் ஆகிய ஊர்களில் அந்தியோதயா  ரயில் நிறுத்த வேண்டும்  என்பதை வலியுறுத்தி முழக்கங்கள்  எழுப்பினர்.


 

சார்ந்த செய்திகள்