Published on 24/07/2021 | Edited on 24/07/2021
மதுரை அருகே ஓடும் லாரியில் காம்ப்ளான் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நான்குவழி சாலையில் காம்ப்ளான் ஏற்றிக்கொண்டு சென்ற லாரியைப் பின்தொடர்ந்து வந்த கும்பல், ஓடும் லாரியில் ஏறி தார்பாயைக் கிழித்து, உள்ளே இருந்த சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள 16 காம்ப்ளான் பொட்டலங்களைத் திருடிச் சென்றுள்ளது. தார்பாய் கிழிந்து தொங்குவதைக் கண்டு அதிர்ந்த ஓட்டுநர், லாரியை நிறுத்திப் பார்த்ததில் காம்ப்ளான் பொட்டலங்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.
இதுகுறித்து மதுரை கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், ஓடும் லாரியில் நிகழ்ந்த இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.