Skip to main content

பாலியல் தொந்தரவு... அடி, உதை, இளம்பெண்ணை சித்ரவதை செய்த ஓ.பி.எஸ்.டீம்.!!!

Published on 18/04/2018 | Edited on 18/04/2018

 

 

     பெரிய இடத்து பிரச்சனை.! நமக்கேன் வம்பு..? என ஆரம்பத்தில் தயங்கினாலும், வேறு வழியில்லாமல் புகாரினை பதிவு செய்து மனுரசீது கொடுத்துள்ளது நெல்லை பெருமாள்புர காவல்நிலையம். என்ன நடந்தது.?

 

  " பெங்களூருவிலுள்ள மென்பொருள் கம்பெனியில் வேலைபார்க்கும் எனக்கு இங்கு சொத்துக்கள் உண்டு. அந்த சொத்தின் வழக்கிற்காக அடிக்கடி நெல்லைக்கு வந்து போவது உண்டு. மாதத்திற்கு இரு தடவையாகவாது இங்கு வரவேண்டும் என்பதாலும், பாதுகாப்பிற்காகவும் ஆரம்பத்தில் இங்குள்ள மயன் அபார்ட்மெண்டில் தங்கியிருந்தேன்.  நான் என் கணவருடன் விவகாரத்துப் பெற்று தனியாக வாழ்கின்றேன் என்பதனையும், என்னுடைய சொத்துக்களை வளைத்துப் போடவும் என்னுடைய மொபைல் எண்ணை அபார்ட்மெண்டில் எடுத்து பேச ஆரம்பித்தார் அங்கு குடியிருந்து வந்த ராஜ்குமார் என்பவர். நாளடைவில் அது செக்ஸ் டார்ச்சராக மாறியது. தேவையில்லாத குறுஞ்செய்திகளும், ஆபாசமான வாட்ஸப் மெஜேஜ்களும் வர அங்கிருப்பது நல்லதல்ல என புறப்பட்டு ராமலிங்கம் நகரிலுள்ள லைப்ஸ்டைல் அபார்ட்மெண்டிற்கு குடி புகுந்தேன். இங்கே என்னவென்றால் அவருடைய உடன்பிறந்த அண்ணனான கிருஷ்ணமூர்த்தி இங்கே இருப்பது பிறகு தான் தெரியவந்தது. அங்கு என்ன நடந்ததோ அது போல் தான் இங்கும் நடந்தது. ஜாடையாகவும், நேரடியாகவுமே பாலியல் தொந்தரவு செய்கின்றனர் இருவரும். இப்பொழுது பள்ளி விடுமுறை என்பதால் பெங்களூருவிலிருந்து குழந்தைகளை கூப்பிட்டு இங்கு இருக்கின்றேன். இரண்டு நாளைக்கு முன் வீட்டிற்குள் நுழைந்த கிருஷ்ணமூர்த்தி என் தலைமுடியை இழுத்து பிடித்து அடிக்க செயின் அறுந்து விட்டது. இதனை தடுக்க முற்பட்ட எனது மகனையும் அடித்துக் காயப்படுத்திவிட்டனர்." என்கிறது வித்யா சேதுராமன் என்பவரால் பெருமாள்புரம் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மனு.

 

  புகார் கொடுத்திருக்கும் வித்யாவோ., " மனுவில் என்ன கூறினேனோ அது அத்தனையும் நிஜம். இரண்டு வருடமாகப் பொறுத்துப் பார்த்தேன். நேரடியாகவே எதிர்த்துப்பார்த்தேன். யார் தெரியுமா..? தலையை கொய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். தனியாக பெண் இருந்தால் குற்றமா..? " என்றார் அவர்.

 

   புகாரினை வாங்கி மனுரசீது மட்டும் கொடுத்துவிட்டு அனுப்பிய காவல்துறை விசாரணைக்காக இன்று வரை சம்பந்தப்பட்டவர்களை அழைக்கவில்லை என்பது மறுக்க முடியாது. சம்பந்தப்பட்டவர்களோ, துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸீன் பினாமியான ஆர்.எஸ்.முருகனின் அண்ணன் மகன்கள் என்பதாலேயே காவல்துறை தயக்கம் காட்டுகின்றது என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

சார்ந்த செய்திகள்