Skip to main content

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் அடித்துக் கொலை!

Published on 10/01/2025 | Edited on 10/01/2025
Communist Party of India union Secretary beaten to passed away

திருச்சி சமயபுரம் அருகே இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் ஒன்றிய செயலாளர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன்(49). இவரது வீடு சமயபுரம் டோல் பிளாசா பூக்கொல்லை பகுதியில் அமைந்துள்ளது. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் நெய் கிருஷ்ணன். மூட்டை தூக்கும் தொழிலாளி. இந்த நிலையில் நேற்று(9.1.2025) இரவு நாய் குரைத்த விவகாரத்தில் முத்துக்கிருஷ்ணனுக்கும் நெய் கிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிக் கைகலப்பு ஏற்பட்டது. இதில் இருவரும் கட்டி புரண்டு சண்டை போட்டுக் கொண்டனர்.

மேலும் கட்டையால் தாக்கிக் கொண்டனர். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உறவினர்கள் முத்துக்கிருஷ்ணனை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் பலன் அளிக்காமல் இன்று அதிகாலை 1 மணி அளவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  அதே சமயம் அவரை தாக்கிய நெய் கிருஷ்ணன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொலை செய்யப்பட்ட முத்துகிருஷ்ணனுக்கு தனலட்சுமி ,புஷ்பா என இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். அவரைப் பிரிந்து இரண்டாவது மனைவியுடன் முத்துகிருஷ்ணன் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்