தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவக்கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்தினர். மருத்துவமனை வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மாணவிகள் நோ என்.எம்.சி. என்ற வடிவில் அமர்ந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை கண்டித்து, முழக்கங்களை எழுப்பினர். தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் உள்ள குறைகளை திருத்த வேண்டுமெனவும், மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு தேவையற்றது எனவும் மாணவிகள் தெரிவித்தனர்.