Skip to main content

நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் வனப்பகுதிகளில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
 

அவ்வப்போது உணவு தேடி ஊருக்குள் வரும் யானைகள் இரவு நேரங்களில் வயல்வெளிக்கு வந்து உணவு உட்கொண்ட பின் காலையில் வனத்திற்குள் சென்று விடுகின்றனர். ஆனால் நேற்று (16/02/2020) நள்ளிரவு ஒரு காட்டு யானை விளைநிலத்தினை தாண்டி ஊருக்குள் புகுந்து, குனியமுத்தூர் கல்லுக்குழி சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்தது. 

coimbatore forest area elephants

அந்த யானையைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து  விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்பு வந்த யானை வனத்தின் உள்ளே சென்று விட்டது.
 

கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் யானை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியே வரும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்