Published on 05/02/2019 | Edited on 05/02/2019

ஒத்த கருத்துடையவர்களுடன்தான் கூட்டணி என்று பஜாக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கஜீராயபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,
மோடி அவர்கள் பிரதமராவதற்கு நாங்கள் உதவ தயார், ஆதரிக்க தயார் என சொல்கின்ற எல்லா கட்சிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்க தயார். ஏற்கனவே எனது அருமை நண்பர் ஓபிஎஸ் ரகசியமான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என கூறியுள்ளார் என கூறினார்.