சென்னை தி.நகரில் உள்ள பாண்டி பஜார் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நடைபாதை வளாகம், சாலைகளை கோயில் மணியை அடித்து திட்டத்தை தொடங்கி வைத்தார். தி.நகரில் ரூபாய் 39.86 கோடியில் நடைபாதை வளாகமும், ரூபாய் 19.11 கோடியில் 23 சீர்மிகு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்,பி வேலுமணி, தங்கமணி, கே.பி அன்பழகன் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் உலக தரம் வாய்ந்த நடைபாதைகள்,சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பகுதி முழுவதும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மக்கள் பயன்படுத்தும் "ஸ்மார்ட் பைக்குகளும்" இடம் பெற்றுள்ளன. அதேபோல் சாலையில் 22 இடங்களில் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைஃ பை வசதியை மக்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை தொடங்கி வைத்த முதலவர் பேட்டரி வாகனத்தில் இருந்த படியே நடைபாதை வளாகத்தை பார்வையிட்டு வருகிறார். இதில் அமைச்சர்களும் முதல்வருடன் சென்று பார்வையிட்டனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் தி.நகர் சாலைகள் முழுவதும் வண்ண ஒளியில் ஜொலிக்கிறது.