Published on 19/01/2020 | Edited on 19/01/2020
போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் இன்று (ஜன.19) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
![cm-palanisamy-polio-drops-day](http://image.nakkheeran.in/cdn/farfuture/16RcPPietAqoPiL85nYkqb03GJ4-D2UUY3upXDL_Kvs/1579405947/sites/default/files/inline-images/111111_27.jpg)
இந்நிலையில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில் ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி இந்நிகழ்வினை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுமார் 2 லட்சம் அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.