Published on 16/04/2020 | Edited on 16/04/2020
கரோனா தடுப்பு பணிகள் தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து வருகிறார்.
![cm palanisamy discussion with district collectors](http://image.nakkheeran.in/cdn/farfuture/o7tYlQTfqvU6PLV81YSALKY6S3NAuC9JU89eEjTJtlY/1587015090/sites/default/files/inline-images/cm345.jpg)
இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், பல்வேறு துறைசார்ந்த உயர் அதிகாரிகளும், காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். ஏப்ரல் 20- ஆம் தேதிக்குப் பின் அமலுக்கு வரும் தளர்வுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.