Published on 23/09/2020 | Edited on 23/09/2020
![cm palanisamy discussion about one nation one ration with ministers and officers](http://image.nakkheeran.in/cdn/farfuture/oile_wAckIimWnFyBe76WkeVdvg4i_FOhiJgmbVE7PM/1600857591/sites/default/files/inline-images/cm4444_4.jpg)
'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் காமராஜ், செல்லூர் ராஜு, தலைமைச் செயலாளர் சண்முகம், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அக்டோபர் 1- ஆம் தேதி முதல் 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதனைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.